இந்திய ரயில்வே துறையில் 12ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Adding Green to your Life

December 25, 2023

இந்திய ரயில்வே துறையில் 12ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

இந்திய ரயில்வே துறையில் 12ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Classical Dancer, Tabala Player ஆகிய பணிகளுக்கென கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) Cultural Quota பிரிவின் கீழ் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 22.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிழக்கு மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:

கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) காலியாக உள்ள Classical Dancer, Tabala Player ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ECR கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ECR வயது வரம்பு:
  • இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
ECR மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

ECR தேர்வு முறை:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Practical Demonstration ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ECR விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EXSM / PWBD / Women – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
ECR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.01.2024) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

No comments:

Post a Comment