கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18ல் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் தொடங்குகிறது.இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18 முதல், 23 வரை இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், புறக்கடை கோழி வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கோழியினங்கள், கொட்டகை அமைத்தல், கோழிகளுக்கான தீவனம் தயாரித்தல், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம் படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 40 வயதுடைய, ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் வரும், 15 க்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment