அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! - Agri Info

Adding Green to your Life

December 30, 2023

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 – 78 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group C பிரிவின் கீழ்வரும் Drivers (Ordinary Grade) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறவும்.

India Post காலிப்பணியிடங்கள்:

Driver (Ordinary Grade) பணிக்கென 78 பணியிடங்கள் இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ளது.

Driver கல்வி தகுதி:
  • 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Driver பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
Driver அனுபவம்:

இந்த India Post சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் Level – 1 Rs.1800 – 56900 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Driver வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Driver சம்பளம்:

Driver (Ordinary Grade) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Level – 02 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

India Post தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி Trade Test, Practical Test (Driving Test) என்னும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.

India Post விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய அஞ்சல் துறை (India Post) சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.02.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

 

🔻🔻🔻

No comments:

Post a Comment