மத்திய மின்அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பயிற்சி (எலக்ட்ரீசியன்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 12.12.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: இந்த ஆள்சேர்க்கை மூலம் 203 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், பொதுப் பிரிவினருக்கு 89 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 47 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 18 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 39 இடங்களும், பழங்குடி இனத்தவருக்கு 10 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன் பாடப்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய படிப்பு, பிஇ, பிடெக் உள்ளிட்ட உயர்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 12.12.2023 அன்று 27 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.
தேர்வு முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer
Based written Test), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ரீதியான தேர்வு (Document Verification & Trade Test) ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த காலிப்பணியிடங்களுக்கான ஊதியங்ங்கள் மற்றும் பணி நிபந்தனைகள், பணியின் தன்மை, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆள்சேர்க்கை அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
🔻🔻🔻
No comments:
Post a Comment