அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. 232 காலியிடங்கள்: இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க! - Agri Info

Adding Green to your Life

December 6, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. 232 காலியிடங்கள்: இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

 இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 3 மண்டல வளாகங்களில் (Regional Campus) காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி இயக்குனர் (Assistant Director), உதவி நூலகர் ( Assistant Librarian) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்ன .

காலியிடங்கள்  பற்றிய விவரங்கள்: 

காலியிடங்கள் எண்ணிக்கை : 232

கீழ்காணும் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள்: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கணினியிய பொறியியல் (CSE),  தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம், மேலாண்மை அறிவியல்

உதவிப் பேராசிரியர் கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் மனிதவியல் துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர்,   தங்களது மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பொறியியல்/தொழில்நுட்ப துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது மேற்படிப்பில் 70%க்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்;

உதவி நூலகர் :  நூலகம் மற்றும் தகவல் அறிவியல், ஆவணப்படுத்துதல் அறிவியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய அளவில் யுஜிசி-ஆல் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்கல்வி உதவி இயக்குனர் : உடற்கல்வி,  விளையாட்டு அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

முக்கியமான நாட்கள்:  இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க : 13.12.2023 பிற்பகல் 5 மணி வரை.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.1,180ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர்  விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 472 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

No comments:

Post a Comment