சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்! - Agri Info

Adding Green to your Life

December 8, 2023

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (CBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியிடங்கள்:

CBI வங்கியில் காலியாக உள்ள BC Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BC Supervisor கல்வி:

BC Supervisor பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் Graduate Degree, BE, MCA, M.Sc, MBA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

BC Supervisor வயது:

இந்த CBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BC Supervisor மாத ஊதியம்:

BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

CBI Bank தேர்வு செய்யும் விதம்:

இந்த CBI வங்கி பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBI Bank விண்ணப்பிக்கும் விதம்:

BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

No comments:

Post a Comment