ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தேசிய நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சித்தா பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட காலிப்பணியிடங்கள்:
பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உதவியாளர் சம்பள விவரம்:
ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியத்தில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment