தமிழக வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத்துறையில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநரகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Marketing Specialist, FPC Execution and Training Specialist ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 06 மாதங்கள் முதல் 02 ஆண்டு கால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலியிடங்கள்:
- Marketing Specialist – 01 பணியிடம்
- FPC Execution and Training Specialist – 01 பணியிடம்
கல்வி:
இப்பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, MSW, M.Sc, MBA, MS ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது வரம்பு:
இந்த தமிழக வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.
மாத சம்பளம்:
- FPC Execution and Training Specialist பணிக்கு ரூ.40,000/- என்றும்,
- Marketing Specialist பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த தமிழக வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment