இதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பச்சை பட்டாணி: 5 முக்கிய நன்மைகள் இருக்கு - Agri Info

Education News, Employment News in tamil

December 15, 2023

இதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பச்சை பட்டாணி: 5 முக்கிய நன்மைகள் இருக்கு

 பச்சை பட்டாணி, இது மிகவும் சுவையான காய்கறிகளில் ஒன்று. இந்நிலையில் இதில் ஆரோக்கியம் நிறைந்த விஷயங்கள் உள்ளது. 

100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள் : 81

கார்போஹைட்ரேட்: 14.45 கிராம்

நார்சத்து: 5.5 கிராம்

சர்கக்ரை : 5.67 கிராம்

புரத சத்து: 5.42 கிராம்

கொழுப்பு சத்து: 0.4 கிராம்

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, 

வைட்டமின் பி-காம்பிளக்ஸ், கால்சியம், இரும்பு சத்து, 

மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சிங்க், 

ஆண்டி ஆக்ஸிடண்டான பிளப்பநாய்ட்ஸ், கரோடி நாய்ட்ஸ் உள்ளது.

இதில் உள்ள பொட்டாஷியம், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட்,

 இதய ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

இதில் உள்ள நார்சத்து, வயிற்றின் செயல்பாடுகளை பாதுகாத்து, மலச்சிக்கலை குறைக்கும்.

இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்பின் 

வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் புரத சத்து மற்றும் நார்சத்து உள்ளது என்பதால் இது அதிகம் சாப்பிட்டது போல் உணர்வை கொடுக்கும். 

இதனால் உடல் எடை அதிகரிக்காது.

இதில் உள்ள நார்சத்து, சர்க்கரை அளவை குறைக்க உதவும். 

மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து, 

இரும்பு சத்தை உடல் எடுத்துகொள்ள உதவும்.  

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment