பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது.
பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.
அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயைத் தண்ணீருடன் கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம்.உங்கள் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கச் சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.
ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பனங்கற்கண்டே மேலானது.
கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.
தினந்தோறும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும்.உங்களின் உடல் சோர்வு நீங்கவும் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் அரை தேக்கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகளை நீங்கத் திரும்பப் பெறுவதுடன் உடல் மற்றும் மனதின் சுருசுருப்பை அதிகரிக்கிறது.
ஞாபக சக்தி
மூளையின் உயிரணுக்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கு நியாபாகத் திறன் அதிகம் இருக்கின்றது.நியாபாகத் திறனை மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதம் பருப்பு மற்றும் சீரகம் இவற்றைச் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் கண் பார்வை திறன் மேம்படும்.
நோய் எதிர்ப்புச் சக்தி
எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று உடல் நலத்தை பாதுகாப்பதில் உடலில் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்கவேண்டியது அவசியம்.உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டுடன் சேர்த்து பாதம், மிளகு தூள் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.
சிறுநீரக கல்
சுண்ணாம்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இந்த பிரச்சனையைத் தீர்க்க இரண்டு தேக்கரண்டி வெங்காயச் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் சுலபத்தில் கரையும் மற்றும் சிறுநீரக மேம்படும் அதிகரிக்கும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment