கிராமப்புறங்களில் பெண்கள் பெருமளவில் தங்களின் சுய வருமானம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது சுய தொழில் செய்வதற்கு சில பெண்கள் மட்டுமே முயற்சி மேற்கொள்ளும் நிலையில் இருந்து வருகிறது.
பெண்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனுள்ள வகையிலும். திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சவுத் இந்தியன் அசோசியேஷன் என் ஜி ஓ ட்ரஸ்ட் (South Indian NGO association trust) மூலமாக கயிறு வாரியத்துடன் இணைந்து சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர்க்கு தேங்காய் நாரில் மதிப்பு கூட்டப்பட்ட மிதியடிகள் தயாரிப்பு பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.
இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 20 மகளிர் மிதியடிகள் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பயிற்சியில் தேங்காய் நார் கொண்டு கயிறுகள் தயாரிப்பதும், தேங்காய் நாரை கொண்டு மிதி அடிகள் தயாரிப்பதும் இரண்டு மாத கால பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி மேற்கொள்ளும் மகளிர் பயிற்சியின் நிறைவில் சுய தொழில் செய்வதற்கான வங்கி கடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்றுத் தருகிறது இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும். கடந்த 15 நாட்களாக தேங்காய் நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறையான மிதியடிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்று வருவதாக பயனாளி தெரிவித்தார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், தேங்காய் நார் மூலமாக மிதியடிகள் தயாரித்து எங்கள் வருமானத்தை மேலும் மேம்படுத்த இம்மாதிரியான பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக தெரிவித்தார்.
பயிற்சி முடிவுற்றதும் அரசு சுயதொழில் செய்வதற்கான கடன் உதவி வழங்கினால் தாங்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து சுயதொழில் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனாளி.
🔻🔻🔻
No comments:
Post a Comment