தொப்பை மற்றும் இடுப்பில் படிந்திருக்கும் ஊளைச்சதையை குறைத்தாலே உடல் கச்சிதமாக அழகாக மாறிவிடும் என்று ஏங்குபவர்கள், உடல் எடையைக் குறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கின்றனர்.
ஏனென்றால், இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் காலை வரை நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருந்தபிறகு, உண்ணும் உணவானது உடலுக்கு ஊக்கத்தை கொடுக்கும். அதேபோல, இரவு முழுவதும் உடல் சீராக இயங்கவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, மிகவும் லேசானதாகவும் அதாவது அதிக கலோரிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
இரவு உணவே, நமது உடல் எடை, தொப்பை, தொந்தி, ஊளைச்சதை, தொடையில் சதை அதிகமாவது என பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. எனவே இரவு உணவில் எதுபோன்ற உணவுகள் இருக்க வேண்டும்? இதைத் தெரிந்துக் கொள்வோம்.
காய்கறி சாலட்
காய்கறிகள், அதிலும் குறிப்பாக, ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இந்த காய்கறிகளில் சாலட் செய்து உண்பது, இரவு முழுவதும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு, விரைவில் பசி எடுப்பாமல் வயிற்றை நிரப்புகிறது. புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்ட காய்கறிகளின் கலவையானது, எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு ஆகும்.
உருளைக்கிழங்கு & வேர் காய்கறிகள்
உருளைக்கிழங்கு மற்றும் பிற வேர் காய்கறிகள் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு அற்புதமானவை. வேகவைத்த வெள்ளை உருளைக்கிழங்கில் உள்ள அதிக அளவு எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உடலுக்கு தேவையானது. இது விலங்கு ஆய்வுகளில் எடை இழப்புக்கு நம்பகமான ஆதாரமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறிகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு முக்கியமானதாகும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்கவிரும்புவோருக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்து மிகுந்த டின்னருக்கான ஏற்ற உணவாக இருக்கும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பருப்பு, கருப்பு பீன்ஸ் மற்றும் சிறுநீரக பீன்ஸ் போன்ற பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட அருமையான உணவாக இருக்கும்.
சூப்கள்
மணம், சுவை, குளிர்ச்சிஆகியவற்றிற்கு இடையில், மற்ற உணவுகளை விட சூப் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இரவு உணவு எது சாப்பிட்டாலும், அதற்கு முன், சூப்பைச் சேர்த்துக்கொள்வது, திருப்தியானதாக இருகும். இரவு உணவை ஒட்டுமொத்தமாக குறைவாக சாப்பிடவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் காய்கறி சூப் உதவும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment