Search

பால் உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 28-ம் தேதி(வியாழக்கிழமை) பால் மற்றும் பால் சார்ந்தஉணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சியானது செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, இந்த பயிற்சி வகுப்பில் ரசகுல்லா, மலாய் பேடா, ரசமலாய், காலா ஜாமுன், பால்கோவா, ரோஸ் சன்தேஷ், குலோப் ஜாமுன், ரோஸ் மில்க் மற்றும் பாதாம் மில்க் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை நகரவாசிகள், மகளிர்,சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தங்களை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

0 Comments:

Post a Comment