தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.
தாமிர பாத்திரத்தில் வைத்த நீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை உள்ளது. செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை குடிக்கும் முன் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தாமிர நீரைக் குடிக்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
செம்பு பாத்திரங்களை அடிக்கடி கழுவாமல் பயன்படுத்தி வந்தால், அதில் பச்சை நிறத்தில் பாசி போல் படர்வதை காணலாம். அது வெறும் கரையோ அழுக்கோ கிடையாது. அந்த பச்சை நிறம் ஒரு வகையான ரசாயனம். காப்பர் பாத்திரமானது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்பனேட் (CuCO3) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது, அதனால் தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிற படலம் உருவாகிறது. இந்த காப்பர் கார்பனேட் கெமிக்கல் நீருடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்லும் போது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தர வாய்ப்புள்ளது.
பலர் தூங்குவதற்கு முன் ஒரு செப்பு பாத்திரத்தை தரையில் வைத்து, காலையில் எழுந்தவுடன் அதன் தண்ணீரைக் குடிப்பார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். தாமிர நீரை தரையில் வைக்கக்கூடாது. இது ஒரு மர மேசையில் வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அசிடிட்டி நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்
செப்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அமிலத்தன்மை கொண்ட நோயாளிகள் தாமிர நீரைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறப்பு
செம்பு நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு தாமிரத்தில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும். வெறும் வயிற்றில் செம்புத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் நன்மை பயக்கும். உணவுக்குப் பிறகு அதை குடிப்பது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தாமிர பாதித்திரத்தில் நீரை சேமித்து வைக்கும் நேரம்
இந்த நீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால், அந்தத் தண்ணீரை ஒரு செப்புப் பாத்திரத்தில் குறைந்தது 8 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். செப்பு பாத்திரத்தில் 48 மணி நேரம் தண்ணீரை சேமித்து வைக்கலாம். எனினும், மேலே கூறியது போல் பாத்திரத்தை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment