Search

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

 

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

குறுகிய கால இராணுவ சேவை (SSC) பிரிவின் கீழ் வரும் Military Nursing Service (Nurse) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய இராணுவம் (Indian Army) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Nursing தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 11.12.2023 அன்று முதல் பெறப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய இராணுவ காலியிடங்கள்:

Military Nursing Service (Nurse) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய இராணுவத்தில் காலியாக உள்ளது.

Nurse கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Nurse வயது விவரம்:
  • இந்த இராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Nurse ஊதிய விவரம்:

Nursing பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு MNS விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Indian Army தேர்வு செய்யும் முறை:
  1. Computer Based Examination
  2. Interview
  3. Medical Examination
Indian Army விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 11.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

0 Comments:

Post a Comment