தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ள, குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் – 4 பணி காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இலவச பயிற்சி வகுப்பு, வேலை நாட்களில் காலை 10:30-மதியம் 1:30 மணி வரை, வரும் 20ம் தேதி முதல் நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment