TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு! - Agri Info

Adding Green to your Life

December 6, 2023

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

 

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது TNUSRB SI 2023 தேர்வின் மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNUSRB SI 2023 நேர்காணல்:

TNUSRB ஆணையத்தின் வலைதள பக்கத்தில் 2023ம் ஆண்டில் Sub Inspector பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 05.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் நிலையான எழுத்து தேர்வானது 26.08.2023, 27.08.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 07.11.2023 அன்று நடைபெற்ற இரண்டாம் நிலையான Document Verification / Physical Test மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தேர்வர்கள் இன்று முதல் (06.12.2023) பெற்று கொள்ளலாம். இப்பட்டியலை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது விரைவில் TNUSRB ஆணையம் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download TNUSRB Viva Voice List 1
Download TNUSRB Viva Voice List 2
Download TNUSRB Viva Voice List 3
Download TNUSRB Viva Voice List 4
Download TNUSRB Viva Voice List 5
Download TNUSRB Viva Voice List 6

No comments:

Post a Comment