WII இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,51,100/- ஊதியம்!
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Grade – II, Section Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
WII மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (WII) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Assistant Grade II – 03 பணியிடங்கள்
- Section Officer – 02 பணியிடங்கள்
WII பணிக்கான தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 02 / 06 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
WII வயது வரம்பு:
இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
WII ஊதியம்:
- Assistant Grade II பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்
- Section Officer பணிக்கு ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
WII தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview (Deputation விதிமுறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
WII விண்ணப்பிக்கும் முறை:
இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
- Assistant Grade II – 15.12.2023
- Section Officer – 30.12.2023
Download Notification & Application Form PDF 1
🔻🔻🔻
No comments:
Post a Comment