சமூக பாதுகாப்புத்துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு/இளைஞர் நீதிக்குழுமத்தில் (Child welfare committee and juvenile justice board ) காலியாகவுள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கணினியில் டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலையில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் பணியில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 42-க்குள் இருக்க வேண்டும்.
மேற்காணும் தகுதியின் அடிப்படையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியிடம் திறன் தேர்வு (Skill Test) மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேனி மாவட்ட வலைதளத்தின் மூலம் (https://theni.nic.in/) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்துக் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகலினை சுயகையொப்பமிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பத்திரிக்கை செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் 05/01/2024 முதல் 19/01/2024 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி மாவட்டம் - 625531 ஆகும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment