பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... ₹20000 வரை சம்பளம்... ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை - Agri Info

Adding Green to your Life

January 11, 2024

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... ₹20000 வரை சம்பளம்... ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

 வடசென்னையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (காலிப்பணியிடம் - 1)

கல்வித் தகுதி: சமூகப் பணி, ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் M.S.W (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூ,20.000/- ஆகும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் - 1 )

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 14.02.2024 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாகவும், மின்னஞ்சல் (oscnorthchennai@gmail.com) மூலமாகவும் விண்ணப்பம் செய்திடலாம். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்

🔻🔻🔻

No comments:

Post a Comment