தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி மின் பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள்
நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நூலகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,900 – 50,400
ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும்
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,600
உதவி மின் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : மின்/ மின் கம்பி பணியாளர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க
வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,600 – 52,400
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள்
இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப்
பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட
முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர்
திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 4
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment