Search

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது!

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PPCC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Scientist C பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய காலியிடங்கள்:

Scientist C பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (PPCC) காலியாக உள்ளது.

Scientist C கல்வி:

இந்த புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Scientist C அனுபவ காலம்:

இப்பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 / 08 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Scientist C வயது:

Scientist C பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Scientist C மாத ஊதியம்:

இந்த PPCC நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் தரப்படும்.

Scientist C தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

Scientist C விண்ணப்பிக்கும் விதம்:

Scientist C பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 24.01.2024 (With in 42 Days) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

0 Comments:

Post a Comment