இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..! இது தான் சரியான நேரம்..! தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..! - Agri Info

Adding Green to your Life

January 24, 2024

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..! இது தான் சரியான நேரம்..! தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த விமான படையில் சேர விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, இந்திய விமானப்படை சார்பில், அக்னிபாத் திட்டத்தின் அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 17.01.2024 முதல் 06.02.2024 வரை இணையவழியாக விண்ணப்பிப்பதற் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியடைய விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணைய வழித்தேர்வு மார்ச் மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது.

2-1-2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2-7- 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோ மோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர் மேசன் டெக்னாலஜி) மூன் றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய 3 நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத் திட் டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தொடர்புக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

No comments:

Post a Comment