தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று, ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியமைக்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஜீப்பு ஓட்டுநர், அலுவலக விண்ணப்பங்கள் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் 10.01.2024-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2024-ஆம் தேதி முதல் 30.01.2024-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் அரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment