அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. ஆனால் சிலவற்றை நமது வாழ்க்கையில் பின்பற்றினால் நாமும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருப்போம். அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.
அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருக்க உங்களுக்கு ஆசையா? ஒரு சிலர் மட்டும் எப்படி அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக மாற சில வழிகள் உள்ளது. நேர்மறையாக சிந்திப்பது, நன்றியோடு இருப்பது, உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை வைப்பது போன்றவை உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொண்டு வரும். நேர்மறையான எண்ணத்தோடு இந்த பழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையிலும் அதிர்ஷ்ட மழை பெய்யும்.
அதிர்ஷ்டத்தை நம்புங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உண்டா? நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான முதல் படி என்ன தெரியுமா? இந்த உலகத்தில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எத்தனை சவால்கள் வந்தாலும் அதை மீறி வெற்றி பெறுவார்கள்.
அதிர்ஷ்டத்தை நம்புங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உண்டா? நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான முதல் படி என்ன தெரியுமா? இந்த உலகத்தில் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எத்தனை சவால்கள் வந்தாலும் அதை மீறி வெற்றி பெறுவார்கள்.
நன்றியுணர்ச்சி : வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் திருப்தியும் கிடைக்க வேண்டுமென்றால் நன்றியுணர்ச்சியோடு இருப்பது அவசியம். இதனால் உங்களிடம் நேர்மறையான ஆற்றல் வளரும். புதிய வாய்ப்புகளை மனம் திறந்து ஏற்றுக்கொள்வீர்கள்.
கடுமையாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் உழையுங்கள் : உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமென்றால், கடுமையான உழைப்பைக் கொடுங்கள். அமைதியாக தங்கள் வேலையை மட்டும் பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல பரிசுகள் கிடைக்கும். வார்த்தைகளை விட செயல்களே அதிகமாக பேசும். அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என நினைக்காமல் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். கடுமையான உழைப்போடு அர்ப்பணிப்பும், மன உறுதியும் நேர்மறையான மனநிலையும் சேரும் போது வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உங்கள் வீட்டு வாசலை எட்டும்.
நீங்கள் புத்திசாலி இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள் : புத்திசாலியாக இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். உங்கள் அறிவுக்கூர்மையை மட்டும் நம்பாமல், கடுமையாகவும் மன உறுதியோடும் உங்கள் உழைப்பைக் கொடுங்கள்; அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் புத்திசாலியாக இருப்பதால் மட்டுமே அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
கிசுகிசு : உங்களைப் பற்றி பிறர் கூறும் கிசுகிசு, வதந்திகள், எதிர்மறை கருத்துகளை கண்டு கொள்ளாதீர்கள். தங்களை அதிர்ஷ்டசாலிகளாக கருதுகிறவர்கள் இதுபோன்ற உரையாடல்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி தீங்கான விஷயங்களை பேச மாட்டார்கள். தங்கள் லட்சியங்களை அடைவதில் தான் அவர்களின் கவனம் முழுவதும் இருக்கும். இந்த குணம் தான் உங்களுக்கு பல வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தருகிறது.
எதையாவது வித்தியாசமாக செய்யுங்கள் : வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் புதிய வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் எதிர்கொள்ளுங்கள். புதிய அனுபவங்களும், சவால்களும் உங்களுக்கு எதிர்பாராத நேர்மறை விளைவுகளைத் தரும். புதிய விஷயங்களில் ஈடுபடுவது, புதிய மனிதர்களை சந்திப்பது அல்லது வழக்கமாக செய்வதை விட்டுவிட்டு வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வது போன்றவை நிறைய அதிர்ஷ்டங்களை உங்கள் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும்.
No comments:
Post a Comment