Search

Happy New Year 2024 : புத்தாண்டு முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற திட்டமா..? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

 ஒரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். இந்த சமயத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கும். அதற்கான சில பயனுள்ள வழிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

தெளிவாக திட்டமிடுங்கள் : நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தெளிவாக திட்டமிடுவது அவசியம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதற்கான பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள். உடல் எடையை குறைக்க வேண்டும், அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஊட்டச்சத்து தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்: நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அப்போது தான் அதற்கேற்ற உணவுகளை சாப்பிட முடியும். உங்கள் உடலுக்குத் தேவையான மேக்ரோனூட்ரியன்கள் (கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்) ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

உணவு திட்டமிடல் : உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற, எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என முதலில் திட்டமிட்டு கொள்ளுங்கள். காலை, மதியம், இரவு, மாலை நேர ஸ்னாக்ஸ் என எந்த நேரத்தில் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதை திட்டமிட்டு அதன்படி சாப்பிட வேண்டும். பசியுடன் இருக்கும்போது ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்க இது உதவும்.

நீரேற்றம் : நாள் முழுவதும் நீரேற்றமாக உங்களை வைத்து கொள்வது அவசியம். இதற்கு போதுமான தண்ணீர் குடிக்கவும். சில நேரங்களில் பசி உணர்வுகள் நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். எனவே அந்த நேரத்தில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது அவசியம்.

சீரான உணவு: பழங்கள், காய்கறிகள், புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பல்வேறு சீரான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது போதுமான அளவிலான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள் : பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும். முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளை சாப்பிடுங்கள். தின்பண்டங்கள் சாப்பிட விரும்பினால் வீட்டிலே செய்து அளவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி : வழக்கமான உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியம் ஆகும். இது நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவுகிறது.

ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிக்க வழிகள்: ஃபைபர் எனும் நார்ச்சத்து உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 35 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது, ஆனால் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு 15 கிராம் மட்டுமே நார்ச்சத்தை எடுத்து கொள்கிறார்கள் . முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பழங்களை ஜூஸ் செய்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.

சிப்ஸ், வெள்ளை அரிசி, ரொட்டி மற்றும் பாஸ்தா இவற்றிற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பழுப்பு அரிசி, பார்லி, தினை மற்றும் முழு தானியங்களை எடுத்து கொள்ளுங்கள். நார்ச்சத்துக்கள் போதுமான அளவில் பெற 1-2 தேக்கரண்டி பாதாம், ஆளிவிதைகள் அல்லது தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பருப்பு, காய்கறிகள் சேர்த்த சூப் அருந்துங்கள்.

உணவின் மூலம் போதுமான நார்ச்சத்துபெற கடினமாக இருந்தால், மருத்துவர்கள் அறிவுரையின்படி ஃபைபர் சப்ளிமெண்ட் பயன்படுத்தப்படலாம்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment