ICAR – SBI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.30,000/- மாத ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

January 2, 2024

ICAR – SBI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.30,000/- மாத ஊதியம்!

 

ICAR – SBI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.30,000/- மாத ஊதியம்!

Young Professionals I, Semiskilled Worker ஆகிய பணிகளுக்கென ICAR – கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் (ICAR – SBI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 29.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Written Test cum Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ICAR – SBI பணியிடங்கள்:

ICAR – SBI நிறுவனத்தில் Young Professionals-I பணிக்கென 06 பணியிடங்களும், Semiskilled Worker பணிக்கென 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.

ICAR – SBI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, B.Sc, M.Sc முடித்தவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI வயது விவரம்:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICAR – SBI ஊதிய விவரம்:
  • Young Professionals I பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Semiskilled Worker பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ICAR – SBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Written Test cum Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

  • Young Professionals I (IT) – 19.01.2024
  • Semiskilled Worker – 18.01.2024
  • Young Professionals I – 17.01/2024
ICAR – SBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICAR – SBI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF 1
Download Notification & Application Form PDF 2
Download Notification & Application Form PDF 3

No comments:

Post a Comment