இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Bank’s Medical Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:
Bank’s Medical Consultant பணிக்கென 07 பணியிடங்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Bank) காலியாக உள்ளது.
Medical Consultant கல்வி தகுதி:
இந்த RBI Bank சார்ந்த பணிக்கு அரசு அல்லது MCI அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Medical Consultant அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவமனை அல்லது கிளினிக் போன்றவற்றில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Medical Consultant வயது வரம்பு:
இந்த Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
RBI Bank ஊதியம்:
இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- ஒரு மணி நேரத்திற்கான ஊதியமாக பெறுவார்கள்.
RBI Bank தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
RBI Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 25.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment