Spices Board-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

January 23, 2024

Spices Board-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

 Spices Board-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Consultant Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

Spices Board-ல் காலியாக உள்ள Consultant Assistant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant Assistant கல்வி தகுதி:

Consultant Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Consultant Assistant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Section Officer பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant Assistant வயது வரம்பு:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Consultant Assistant ஊதியம்:

Consultant Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 31.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.



🔻🔻🔻

No comments:

Post a Comment