பயிற்சி காலத்திலேயே 10,000 உதவித்தொகை..! விருதுநகரில் நடை பெற உள்ள பயிற்சி முகாம்..! - Agri Info

Adding Green to your Life

February 8, 2024

பயிற்சி காலத்திலேயே 10,000 உதவித்தொகை..! விருதுநகரில் நடை பெற உள்ள பயிற்சி முகாம்..!

 விருதுநகர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் ஐடிஐ மாணவர்களுக்காக பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஐடிஐ தேர்ச்சி பெற்று இது வரை தொழிற் பழகுர் பயிற்சி பெறாத மாணவர்களுக்காக பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 12.02.2024 அன்று காலை 9.30 முதல் 5 மணி வரை விருதுநகர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இந்த பயிற்சியில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், பயிற்சி காலத்தில் மாணவருக்கு உதவித்தொகையாக 7000 முதல் 10,000 வரை வழங்கப்படும்.

எனவே இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

No comments:

Post a Comment