10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ... கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை... முழுவிவரம் இதோ. - Agri Info

Adding Green to your Life

February 26, 2024

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ... கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை... முழுவிவரம் இதோ.

 தென்னிந்திய பர்மாவில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ், பல் மருத்துவமனைகள், சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் ஆட்சேர்ப்பு பிரிவு மற்றும் அலகு வாரியாக 48 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

 

.எண்

பிரிவு

காலியிடங்கள் எண்ணிக்கை

வயது வரம்பு

1

OBC

12

21-33

2

SC

6

21-35

3

ST

3

21-35

4

EWS

4

21-30

ஊதிய விகிதம், காலி இடங்கள்:

.எண்

பணியிடம்

ஊதிய விகிதம்

காலியிடங்கள் எண்ணிக்கை

கல்வி தஊதிய விகிதம்குதி

1

அலுவலக உதவியாளர்

5,200 - 20,200

12

பத்து, பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஐடிஐ.

2

விற்பனையாளர்

6,200 - 26,200

22

பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ.

3

மேற்பார்வையாளர்

6,200 - 28,200

14

ஏதேனும் ஒரு பட்டம்.

கட்டணம்:

பயிற்சி காலத்தில் ஒரு வட்டத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படும், தேர்வானது எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முறையில் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஒன்றரை மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்ணிற்கு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக SC/ ST பிரிவினருக்கு ரூ.250 மற்ற பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

முகவரி:

தென்னிந்திய பன்மாநில வேளாண் அறிவியல் கூட்டுறவு சங்கம், தலைமை அலுவலகம், டவுன்ஹால் வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் - 632004 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும்.

இணைக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள்: 

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தொழில்நுட்ப மற்றும் பிறதகுதிச் சான்று ரூ. 27 அஞ்சல்தலை ஒட்டப்பட்டு சுய விலாசம் எழுதி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

சிறப்பு வழிமுறைகள்: 

விண்ணப்பங்கள் www.simcoagri.com என்ற இணையதளத்திலும் மற்றும் SIMCO தலைமை அலுவலகத்தில் மட்டும் கிடைக்கும். முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் எந்தவொரு அறிவிப்பு இன்றி நிராகரிக்கப்படும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பணிக்காக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தி ரசீது இல்லாத விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை அனுப்பும் கடைசி தேதி அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழை வைத்திருந்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் 24*10 செமீ அஞ்சல் உரையின் மேல் ரூ.27-க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்டு சுயா விலாசம் எழுதி இணைக்கப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணைக்கப்பட்ட ஆவணங்கள் போலி என கண்டறியப்பட்டால் ரத்து செய்யப்படும். கட்டணம் எந்தவொரு இழப்பீடும் திருப்பித்தர கூட்டுறவு சங்கம் பொறுப்பேற்காது.

மேலும், இறுதி நாளுக்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் காரணம் எதுவாயினும் நிராகரிக்கப்படும். கையெழுத்து இல்லாத விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கிளைகளில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தபடுவார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment