தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. தினமும் காலையில் இதை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு புத்துணர்ச்சியும் தருகிறது. தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சையை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்களை இங்கே பார்க்காலம்…
ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. இது உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை தடுத்து ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மூலம் செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
செரிமானத்திற்கு நல்லது : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகமன நார்ச்சத்து உள்ளது. ஆகையால் இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் குறைந்து மலம் கழிப்பது சீராகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து என பல வைட்டமின்களும் மினரல்ஸ்களும் உள்ளது. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நோய் தொற்றுகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
ஆற்றலை அதிகப்படுத்துகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இருக்கும் இயற்கையான சர்க்கரை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக தருகிறது. இதை தினமும் காலையில் சாப்பிடும் போது வயிறு நிறைந்த திருப்தி கிடைப்பதோடு அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
இதய நலன் : ஊற வைத்த உலர் திராட்சையில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உங்கள் ரத்த அழுத்தம் ஒழுங்குப்படுத்த உதவுவதோடு இதய நலனை பாதுகாக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம் : ஊற வைத்த உலர் திராட்சையில் கால்சியம் மற்றும் போரான் அதிகளவு உள்ளது. இது நம் எலும்புகள் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் எலும்புப்புரை நோய் தாக்கும் அபாயமும் குறைகிறது.
சரும ஆரோக்கியம் மேம்படுகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி இருப்பதால், நம் உடலில் கொலஜன் உற்பத்தியாக தூண்டுவதோடு இளமையான தோற்றத்தையும் பளபளப்பான சருமத்தையும் தருகிறது.
ரத்தசோகை குணமாகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாகும். இதை சாப்பிடுவதால் அவர்களின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடை பராமரிப்பு : ஊற வைத்த உலர் திராட்சையில் அதிகமான நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டுமென விரும்புகிறவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
மனநிலையை உற்சாகப்படுத்துகிறது : ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரையும் செரோடோனினும் இருப்பதால் உங்களது பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்து மனதை சந்தோஷமாக வைத்திருக்க உதவுகிறது.
No comments:
Post a Comment