உச்ச நீதிமன்றம் (SCI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Director (Library) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,23,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உச்ச நீதிமன்ற காலியிடங்கள்:
உச்ச நீதிமன்றத்தில் (SCI) Director (Library) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Director கல்வி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் Law, Library Science பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Director அனுபவம்:
Director (Library) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நூலகங்களில் Level 11 / 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Chief Librarian, Librarian பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director வயது:
இந்த உயர் நீதிமன்ற பணிக்கு 01.02.2024 அன்றைய தினத்தின் படி, 40 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
SCI மாத ஊதியம்:
Director (Library) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Level 13 படி, ரூ.1,23,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
SCI தேர்வு செய்யும் விதம்:
இந்த உயர் நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SCI விண்ணப்பிக்கும் விதம்::
Director (Library) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 11.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
0 Comments:
Post a Comment