இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Medical Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
HCL காலிப்பணியிடங்கள்:
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) காலியாக உள்ள Senior Medical Officer பணிக்கென 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Senior Medical Officer கல்வி விவரம்:
Senior Medical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, PG Diploma, BDS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Senior Medical Officer வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சம் 32 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Senior Medical Officer ஊதிய விவரம்:
இந்த HCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
HCL தேர்வு செய்யும் முறை:
26.02.2024, 29.02.2024, 04.03.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் Senior Medical Officer பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
HCL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Senior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment