சேலம்: சேலத்தில் வரும் 16-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 16-ம் தேதி சேலம் கோரி மேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளன.இம்முகாமில் அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
No comments:
Post a Comment