திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில், குமரன் மகளிர் கல்லூரியில் வரும் 17-ம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் பிரம்மாண்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான வேலை நாடுபவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். எழுத, படிக்க தெரிந்தவர்கள் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வி தகுதி கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலை பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும். மேலும், விவரங்களுக்கு 0421- 2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுகிறவர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையங்கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான துண்டறிக்கைகளை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
🔻🔻🔻
No comments:
Post a Comment