தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காலியாக உள்ள 1933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.
தமிழக அரசு அறிவிப்பு:
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இங்கு காலியாக உள்ள 1,933 பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவை அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 29 மற்றும் 30ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment