மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? ரூ.25,000 வரை சம்பளம்... மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சூப்பர் வேலை - Agri Info

Adding Green to your Life

February 5, 2024

மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? ரூ.25,000 வரை சம்பளம்... மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சூப்பர் வேலை

 நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகமண்டலம் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்செர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள்  தற்காலிகமானது தான் என்றும் Outsourcing மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1. பதவியின் பெயர்:  திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (District Project Management Unit)

காலியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகை அலுவலகத்திலிருந்து ரூ.35,000/- வெளிநிரவல் முகமை மூலம் (சேவை கட்டணம் உட்பட) மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.

2. பதவியின் பெயர்:  தகவல், கல்வி மற்றும் தொடர்பு பதவி (Information, Education and Communication Cell)

 காலியிடங்கள் எண்ணிக்கை:  குழுவிற்கு,  இரண்டு

கல்வித் தகுதி:  இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் Mass Communication/Mass Media துறையில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான ஒரு புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மக்கள் தொடர்பு / தண்ணீர் மற்றும் சுகாதாரம் / சமூக அணி திரட்டல்/ பொதுத்துறை தொடர்பு ஆகியவற்றில் 2-3 வருட அனுபவம் விரும்பத்தக்கது. அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், உள்ளுர் கலைஞர்கள்.சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பலதரப்பு கூட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய தரவு மற்றும் ஆவணங்களைத் தேடுவதற்கு மைக்ரோசாப்ட் வேர்டு, பவர்பாயிண்ட், அடோப் போட்டோஷாப் மற்றும் இல்லஸ்ரேட்டர் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுப்புகளுடன் பரிட்சயமான கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும்.வீடியோ தயாரித்தல், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியான எழுத்துத் திறன், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக்காட்சி திறன் (Presentation skills) மற்றும் தமிழிசை (Tamil Pop) கலாச்சாரம் பற்றிய நல்ல புரிதல் அவசியம்.

உயர்தரத்துடன் வெளியிடப்பட்ட படைப்பு அல்லது தொடர்புடைய துறையில் முன் அனுபவம் இருக்கும்பட்சத்தில், முறையான கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயதை மாவட்ட ஆட்சித் தலைவர்  தளர்த்தலாம். இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாவட்ட வளர்ச்சி முகமை, உதகை அலுவலகத்திலிருந்து ரூ.25,000/- Outsourcing முகமை மூலம் (சேவை கட்டணம் உட்பட) மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.மேற்படி,  Outsourcing முறை மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கூடுதல் ஆட்சியர் (வ) /திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகமண்டலம் - 643001 நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு 06.02.2024-க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும் .

🔻🔻🔻

No comments:

Post a Comment