திருச்சியில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Adding Green to your Life

February 15, 2024

திருச்சியில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

Project Assistant & Associate பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சம்பள விவரம்:

Project Associate – ரூ. 35,000/-
Project Assistant – ரூ.  15,000/-

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  ME/M.Tech, Post Graduation Degree படித்தவர்கள் Project Associate பதவிக்கும், BE/B.Tech, Degree, Diploma படித்தவர்கள் Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், சிவில் இன்ஜினியரிங் துறை, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-620015-ல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, உரிய சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள், தரம்/மதிப்பெண்கள், கேட், பயோடேட்டா போன்றவற்றின் அசல் மற்றும் புகைப்பட நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.


🔻🔻🔻

No comments:

Post a Comment