தென்காசியில் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்..!! - Agri Info

Adding Green to your Life

February 9, 2024

தென்காசியில் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்..!!

 இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சிர் கமல் கிஷோர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 6244 பணிக்காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி -IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டித்தேர்விற்கு தயாராகும் ஆர்வலர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

இப்பயிற்சி வகுப்பின் சிறப்பு அம்சங்கள்: முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள், புதன்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட https//tamilnaducareerservices.tn.gov.in என்றஇணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

மேற்காணும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

No comments:

Post a Comment