Search

தேர்வு இல்லை; ஆவடி தொழிற்சாலையில் 40 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போர் 

வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices (Engineering/ Technology)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 20

Computer Science and Engineering - 5

Electrical & Electronics Engineering - 3

Electronics and Communication Engineering - 4

Mechanical Engineering - 5

Automobile Engineering – 3

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or

 Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10

Computer Engineering/ Computer Technology - 2

Electrical & Electronics Engineering - 1

Electronics and Communication Engineering - 1

Mechanical Engineering - 3

Automobile Engineering – 3

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or 

Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 8,000

Graduate Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10

B.Sc. - Computer Science - 5

B.Com - 5

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் B.Sc Computer Science, 

B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 9000

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ 

மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு 

செய்துக் கொள்ள வேண்டும். 

பின்னர், COMBAT VEHICLES RESEARCH & DEVELOPMENT ESTABLISHMENT (CVRDE) 

என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை 

ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2024

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2024/02/CVRDE_Notification_updated.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻

0 Comments:

Post a Comment