Search

குரூப் 4 தேர்வில் பெண்கள் வெற்றி பெற டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்..!!

 தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த குருப் 4 தேர்வு முடிவுகள் அமைய உள்ளது. பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடுடன் வெளியாக உள்ள இந்த தேர்வு முடிவில் பொது பிரிவிலும் பெண்களுக்கான இடம் கிடைக்கும். இதனால் பெண்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோராயமாக சுமார் 5 மதிப்பெண்கள் வித்தியாசம் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வில் பெண்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் எழுதலாம். பொது அறிவு, திறனறித் தேர்வு மற்றும் மாெழிப்பாடத்தில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணிநேரம் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண். எளிதாக இருக்கும் தேர்வு தான் இது.

படித்து முடித்து ஒரு 3-4 வருடத்திற்குள் தேர்வு எழுதினால் 150 மதிப்பெண் நிச்சயம் எடுக்கலாம். ஏனெனில் நீங்கள் பள்ளியில் படித்தது தான் இதற்கு மொத்த கேள்விகளும் வரும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.6-12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் நன்றாக படியுங்கள். தினசரி நாளிதழ் படித்தல் அவசியம். அனைவரும் செய்திகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.

குரூப் 4தேர்வுக்கு தயார் செய்யும் முறை:

குரூப்-4 தேர்வுக்கு தமிழ் 100 வினாக்கள், கணிதம் 25 வினாக்கள், பொதுஅறிவு 75 வினாக்கள் கேட்கப்படும். பொதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் தேர்வின் கடினத் தன்மையைப் பொறுத்து மாறும். ஆனால் 180 கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்கும் பட்சத்தில் வேலை பெறுவது உறுதி. இதற்கு மொழி படத்தில் குறைந்தது 95 வினாக்களுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். 11 மற்றும் 12 வகுப்பு புத்தகங்கள் படிக்கும் பட்சத்தில் கூடுதலாக 6 முதல் 7 கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

கணிதத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் பத்தாம் வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இருந்து மட்டுமே அனைத்து கேள்விகளும் கேட்கப்படும். பொது அறிவு பொருத்தவரை பத்தாம் வகுப்பு வரை படிப்பது போதுமானதே. 11 12ஆம் வகுப்பு புத்தகங்கள் படிக்கும் பட்சத்தில் கூடுதலாக 10 கேள்வி வரை விடை அளிக்க முடியும். அறிவியல் படிப்பதற்கு கடினமாக உணரும் பட்சத்தில், உயிரியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு. வேதியியல் மற்றும் இயற்பியல் முக்கியமான சில பகுதிகளை படித்தால் போதுமானது.

Current affairs பொருத்தவரை தினமும் குறைந்தது ஒரு செய்தித்தாள் கட்டாயமாக படிக்கவேண்டும். இந்து தமிழ் நல்லது. ஒரே புத்தகத்தை பலமுறை படிப்பது சிறந்தது . ஒரு பாடத்திற்கு பல புத்தகங்களை படிப்பது நேரத்தை வீணாக்கும். வாரத்திற்கு குறைந்தது மூன்று மாதிரி தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். இவற்றை பின்பற்றும் பட்சத்தில் கண்டிப்பாக 180 கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். பள்ளி சமச்சீர் புத்தகங்கள் மட்டுமே போதுமானது.

பெண்கள் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

குரூப் நான்கு தேர்வில் பெண்கள் வெற்றி பெறுவதன் மூலம் அரசாங்க வேலையுடன் கர்ப்ப காலங்களில் விடுப்புகளும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மணி நேரங்களில் மட்டுமே வேலை செய்தால் போதும் அதிக வேலைப்பளு இருக்காது. நல்ல சம்பளத்துடன் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

0 Comments:

Post a Comment