கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்தே மக்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த அறிகுறிகளை சுதாரித்துக்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
மன அழுத்தம் அதிகரிக்கும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முதல் அறிகுறி மன அழுத்தம். உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்கிறீர்கள் எனில் அதை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையெனில் இரத்ததின் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்துவிடும். இதுதான் நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.
தொடர் தொற்றுகள் : வெள்ளை சிவப்பு அணுக்கள் குறைந்துவிட்டது எனில் நோய் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்.
சோர்வு : நோய் எதிர்ப்பு சக்தி குறையக் குறைய உடலின் ஆற்றலும் குறையும். இதனால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இரவு போதுமான தூக்கம் தூங்கியிருந்தாலும் பகலிலும் சோர்வாகவும், தூக்கம் கண்களில் இருந்துகொண்டே இருக்கும். தூங்கலாமா என உடல் ஏங்கும்.
காயங்கள் மெதுவாக ஆறும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடலில் காயங்கள் ஆறுவது தாமதமாகும். அந்த இடத்தில் காயம் மறைந்து புதிய தோல் உருவாக நீண்ட நாட்கள் ஆகும்.
மூட்டு வலி : தொடர் மூட்டு வலிகளால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் இதற்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் காரணம். மூட்டு வலி நிலையை அடைகிறீர்கள் எனில் பிரச்னை தீவிரமாகிறது என்று அர்த்தம். எனவே இதை கவனிக்காமல் விடாதீர்கள்.
No comments:
Post a Comment