பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா திட்டம். இந்த திட்டம் குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சமூகத்தில் பெண்களில் வளர்ச்சி என்பது மிக முக்கியமாக இருக்கிறது. கல்வியை தொடர்ந்து பெண்கள் பல்வேறு துறைகளில் கால்பதித்து சாதனைப் படைத்து வருகின்றனர். தொழிற்துறையில் பெண்கள் தனித்து செயல்படும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தொழிற்கல்வியை வழங்கி வருகிறது. மேலும் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க கடன் உதவிகளும் செயல்பாட்டில் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா திட்டம். நன்றாக சமைக்க தெரிந்த பெண்கள் தனே சமையல் அதாவது கேட்டரிங் தொழில் தொடங்க இந்த திட்டம் உதவுகிறது.
யாருடைய உதவியும் இன்றி தானாக தொழில் தொடங்க வேண்டும் என கனவு கானும் பல பெண்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கிறது. இந்த திட்டம் மூலம் ரூ.50,000 கடனாக வழங்கப்படுகிறது.
கேட்ரிங் தொழில் தொடங்க தேவையான சமையல் உபகரணங்கள், உணவு பொருட்கள், சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் தேவையான பொருட்களை இந்த பணத்தின் மூலம் ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கி இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரும் கடன் தொகையை 36 மாதங்கள் தவணை முறையில் வங்கிக்கு திரும்பி செலுத்த வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் வட்டி என்பது அப்போதைய சந்தை நிலவரத்தின்படி நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் முழு பயணையும் பெறமுடியும்.
உங்களுக்கு நீண்ட நாட்களாக சமையல் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு, உங்களின் கனவை நினைவாக்கி கொள்ளலாம்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment