குளிர்காலத்தில் அதிகரிக்கும் காது வலி.. இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..! - Agri Info

Adding Green to your Life

February 1, 2024

குளிர்காலத்தில் அதிகரிக்கும் காது வலி.. இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

 

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து எங்கும் இதமான சூழலை ஏற்படுத்தினாலும், இந்த சமயத்தில் பலருக்கும் காது வலி என்ற தொந்தரவும் கூடவே சேர்ந்து வருகிறது. வெப்பநிலை குறைவதன் காரணமாக நமது உடலில் சாதாரண தொந்தரவு முதல் தொற்றுகள் வரை என பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நமக்கு ஏற்படும் அசௌகர்யங்களை தவிர்க்க முடியும். அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

வெதுவெதுப்பை தரும் தொப்பி அணியுங்கள் : குளிர் காற்றிலிருந்து உங்கள் காதுகளை பாதுகாப்பதற்கான எளிய வழி தொப்பி அணிவது மட்டுமே. அதிக தரமுள்ள, உங்கள் காதுகாதுகளுக்கு நன்கு பொருந்தக்கூடிய, குளிர் காற்று உள்ளே செல்லாதவாறு தடுக்கக்கூடிய தொப்பியாக பார்த்து வாங்குங்கள். கம்பளி துணியாக இருந்தால் மிக நல்லது. குறைவான வெப்பநிலையில் காதுகளை மூடுவதன் மூலம் காது வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மஃப்ளர்: தொப்பியுடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பிற்கு மஃப்ளர் பயன்படுத்துங்கள். உங்கள் கழுத்தைச் சுற்றி மஃப்ளரை பயன்படுத்துவதால் நடுங்கும் குளிரிலிருந்து உங்கள் காதுகள் பாதுகாக்கப்படும். இந்த மஃப்ளர் உங்கள் காதுகளுக்கு தேவையான பாதுகாப்பை தருவதோடு உங்களை ஸ்டைலிஷாகவும் வெளிப்படுத்தும்.

உடனடி சிகிச்சை அவசியம் : குளிர்காலத்தில் வரக்கூடிய சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காது வலியை அதிகப்படுத்திவிடும். மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிந்தால், காதுகளுக்கு தொற்று பரவாமல் இருக்க உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அறிகுறிகளை போக்க நன்றாக நீர் அருந்துங்கள், நன்றாக தூங்குங்கள். தேவைப்பட்டால் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி பயன்படுத்துங்கள்.

காதுகளை ஈரப்படுத்துங்கள் : குளிரான வெப்பநிலை நமது சருமத்தை வறண்டு போக வைக்கும். இதில் காதும் விதிவிலக்கல்ல. எண்ணெய் அல்லது மிதமான ஹைபோ அலர்ஜெனிக் லோஷன் காதுகளுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. வெளிப்புற காதில் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதிகளிலும் இந்த லோஷனை பயன்படுத்துங்கள். சருமத்தில் ஈரப்பதம் இருப்பதால் எரிச்சல் ஏற்படுவது குறைவதோடு காதுகளும் ஆரோக்கியம் பெறுகிறது.

எந்நேரமும் காதை சுத்தப்படுத்தாதீர்கள் : காதுகளின் சுகாதாரத்தை பேணுவது அவசியம் என்றாலும், அதிகப்படியாக சுத்தம் செய்வதால் காதுகளில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் குறைந்து நமக்கு அசௌகர்யத்தை தருகிறது. காதுகளின் வெளிப்புறத்தை மென்மையாக சுத்தப்படுத்துங்கள். காதிற்குள் எந்தப் பொருளையும் நுழைத்து சுத்தம் செய்யாதீர்கள். அப்போதுதான் காதுகளுக்குள் இயற்கையாகவே இருக்கும் தடுப்பாண்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததோடு குளிர்காலத்தில் காது வலி வரும் ஆபத்தும் குறையும்.

குளிர்காலத்தில் இதுபோன்ற எளிமையான முறைகளை பின்பற்றுவதால் காதுகளுக்கு வரக்கூடிய ஆபத்தை குறைக்க முடியும். நாங்கள் கூறிய டிப்ஸ்களை பின்பற்றி எந்தவித காது வலியும் இன்றி குளிர்கால அழகை ரசியுங்கள்.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment