இந்திய சமையலறையில் நீக்கமற நிறைந்திருக்கும் புதினா இலையிலிருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியே இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ஆரோக்கியத்தை பலப்படுத்தும் புதினா இலை : புத்துணர்ச்சியான நறுமணமும் சுவையும் கொண்ட புதினா இலையில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல நன்மைகள் உள்ளது. ஆனால் நாம் வெறும் சுவைக்காக மட்டுமே புதினா இலையை சமையலில் பயன்படுத்துகிறோம். இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால் புதினா இலை முழுதுமே பல சத்துக்கள் உள்ளது. நன் அன்றாட உணவில் புதினா இலையை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஊட்டச்சத்து : நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல ஊட்டச்சத்துகள் புதினா இலையில் இருக்கின்றன. நமது கண் பார்வைக்கு முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டான வைட்டமின் சி, இரும்புச்சத்து, மாக்னீசியம், ஃபோலேட் போன்ற நம் மெடபாலிக் செயல்பாடுகளுக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவக்கூடிய பல ஊட்டச்சத்துகள் புதினா இலையில் உள்ளன.
செரிமானத்திற்கு உதவுகிறது : நமது வயிறுகளுக்கு இதமளிக்கக் கூடிய புதினா இலை, செரிமான தொந்தரவுகளை போக்குகிறது. குறிப்பாக குடல் அழற்சி நோயுள்ளவர்கள் புதினா இலையை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. புதினா இலையிலிருந்து தயாரிக்க கூடிய பெப்பர்மிண்ட் ஆயில், குடல் அழற்சி நோயின் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகிறது. இயற்கையாகவே புதினா இலையில் குளிர்ச்சி தன்மை உள்ளதால் கோடை காலத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். லெமன் ஜூஸில் சிறிதளவு புதினா சேர்த்து குடிப்பது அல்லது புதினா டீ உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.
வாய் சுகாதாரம் : புத்துணர்ச்சியான சுவாசத்திற்கும் தீங்கிழைக்கும் பாக்டீரியாவை அழிப்பதற்கும் புதினா இலை உதவியாக இருக்கிறது. சிறிதளவு புதினா இலையை வாயில் போட்டு மெல்லுவதால், ஈறுகள் மற்றும் பற்களின் அரோக்கியம் பலம் பெறுகிறது.
ஒவ்வாமையை போக்குகிறது : புதினா இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒவ்வாமையை போக்குவதிலும் ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்வதிலும் உதவியாக இருக்கிறது. புதினா இலையின் நறுமணத்தை நாம் சுவாசிக்கும் போது அலர்ஜி அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சரும ஆரோக்கியம் : புதினாவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. மேலும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் எரிச்சலிருந்தும் சருமத்தை புதினா இலை காக்கிறது. அழகுக்கலை பொருட்களில் புதினா இலையை சேர்த்துக்கொள்வதால் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
புதினா இலையை டயட்டில் சேர்ப்பது எப்படி? புதினா சட்னி, புதினா டீ என பல உணவுகளை நாம் புதினா இலையிலிருந்து தயாரிக்கலாம். சாலட் செய்வதாக இருந்தால் அதில் கொஞ்சம் புதினா இலையை சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். உங்கள் டெசர்டின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகப்படுத்த சிறிதளவு புதினா இலையை சேர்க்கவும். நம் உணவிற்கு சுவையை அதிகரிப்பதோடு நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் ஆரோக்கியம் தரும் மகத்துவம் புதினா இலையில் உள்ளது.
No comments:
Post a Comment