சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் University Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 12.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் University Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
University Research Fellow கல்வி தகுதி:
University Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Physics, Material Science பாடப்பிரிவில் PG Degree, Ph.D முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
University Research Fellow வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
University Research Fellow ஊக்கத்தொகை:
University Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
University of Madras தேர்வு முறை:
இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 15.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
University of Madras விண்ணப்பிக்கும் முறை:
University Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் ரூ.200/- ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்திய ரசீதையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment