திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டில் உள்ள - தேசிய ஊரக நலவாழ்வு குழுமம் மையத்தில் (National Health Mission) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு (19.02.2024) கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் விவரங்கள்:
பதவியின் பெயர்: Refrigeration Mechanic
பதவியிடங்களின் எண்ணிக்கை: 1
வயது வரம்பு : 45 வயது வரை
மாத தொகுப்பூதியம் : ரூ. 20 ஆயிரம்தகுதி: Certificate Course in ITI
Refrigeration Mechanic மற்றும் Air
Conditioning தொடர்புடைய துறைகளில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ; ஓராண்டு பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும்;
பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator
பதவியிடங்களின் எண்ணிக்கை : 2
வயது வரம்பு : 35 வயது வரை;
மாத தொகுப்பூதியம்: ரூ. 15 ஆயிரம்
தகுதி: கணினி அறிவு கொண்டிருத்தல் வேண்டும்; ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
3. பதவியின் பெயர் : Office Assistant
பதவியிடங்களின் எண்ணிக்கை : 1
வயது வரம்பு: 40 வயது வரை
மாத தொகுப்பூதியம்: ரூ. 10 ஆயிரம்
கல்வித் தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி
4. பதவியின் பெயர்: Multipurpose Worker
பதவியிடங்களின் எண்ணிக்கை : 13
வயது வரம்பு : 40 வயது வரை
மாத தொகுப்பூதியம் : நாளொன்றுக்கு ரூ. 300
தகுதி: 8ம் வகுப்புத் தேர்ச்சி
5. பதவியின் பெயர் : Dispensers
வயது வரம்பு : 35 வயது வரை
பதவியிடங்களின் எண்ணிக்கை : 1
மாத தொகுப்பூதியம்: நாளொன்றுக்கு ரூ. 750
தகுதி: மருந்தியியல் துறையில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பட வேண்டிய முகவரி:-
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5 சூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம்: 602 001.
தொலைபேசி எண்: 044-27661562
நிபந்தனைகள்:-
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
4.விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
5. திருவள்ளுர் மாவட்ட இணையதள முகவரி https// tiruvallur.nic.in விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment