Search

சென்னையில் ரூ.80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

 ICMR கீழ் இயங்கி வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) ஏற்பட்டுள்ள Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant) ஆகிய பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு சரியான நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது Interview-ல் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant), Project Data Entry Operator Grade B, Senior Project Assistant (UDC) மற்றும் Project Multi-Tasking Staff (Helper) பதவிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10th + Diploma (MLT/DMLT)/ 12th in Science + Diploma (MLT/DMLT) + Five Years Experience in relevant subject /field/ MBBS with MPH/PhD/ முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு  பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ18,000/- முதல் ரூ.80,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIRT தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள  நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR-NIRT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIRT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link



🔻🔻🔻

0 Comments:

Post a Comment