புதுச்சேரி குழந்தைகள் நல வாரிய பதவிகள்; யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன? - Agri Info

Adding Green to your Life

February 19, 2024

புதுச்சேரி குழந்தைகள் நல வாரிய பதவிகள்; யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன?

 புதுச்சேரி மாநிலக் குழந்தைகள் நலக் குழு தலைவர், உறுப்பினார்கள், சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் 

முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

புதுவை மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் புதுச்சேரி 

உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் செயல்படுகிறது. அதனடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகளுக்கு புதுவையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் நலக் குழு தலைவர் பதவிக்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஆகிய பிராந்தியங்களில் தலா ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்கள்.

நலக்குழு உறுப்பினா்களாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவற்றுக்கு தலா 4 பேரும், சிறார் நீதி வாரிய உறுப்பினர்களாக 3 பிராந்தியங்களிலும் தலா 2 பேரும் என மொத்தம் 21 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பணிக்காலம் 3 ஆண்டுகள். சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மார்ச் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி வாரியம் வளாகம், புது சாரம், முகவரிக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🔻🔻🔻

No comments:

Post a Comment